புளிச் சிறு கீரை

“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்
யோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்
வெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்
புளிச்சிறு கீரையிணும் போது”

புளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும்.

இரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.

காட்டுக் கடுகு

"வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பிநிசம் ஓடுங்காண் - போதெறிந்து
காய் வேளைக் காயும் விழிக் காரிகையே!
நாய் வேளையுண்ண நவில் வையமிதில்"

காட்டுக் கடுகின் இலையை வெந்நீர் விட்டுக் கசக்கிப் பிழிந்த சாற்றில்
இரண்டொரு துளி காதில்விட காது நோய் குணமாகும்.

வாதம், உடல் கடுப்பு, வன்சூலை, பீநிசம் ஆகிய நோயெல்லாம் இம்மூலிகையால்
குணமாகும்.

தீம்பாலை

"மேக வெட்டை சந்நிவிட பாகம் நேத்திர நோய்
தாகமுந் தோடஞ்சர்த்தி சாரணலம் - வேகமோ
டேறு சலம் பீநிமிரத்த முந்தீம்பாலையெனுந்
தூறுவா திக்கறுஞ் சொல்"

தீம்பாலை மரத்தினால் வெள்ளை, கண்நோய், வாந்தி, பித்தம், நீறேற்றம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும். பழம் சாப்பிட பசி உண்டாகும், வெப்பம் தணியும்!

சின்னி

"கடிவிடமும் காணாக் கடிவிடமும் மாதர்
இருவிடமும் ஓடுமிதுவன்றி - நெடிய விழிக்
கன்னி கையே மேகங் கணக் காய்ச்சல் மாந்தமும் போஞ்
சின்னி யிலைக்குத் தெறித்து"

சின்னி இலைக்கு வண்டு கடி, நஞ்சு, காணாக்கடி, நஞ்சு, மந்தம் முதலியன் போகும். சின்னி வேரால் மூலநோய், குருதிக் கழிச்சல் நீங்கும். வெள்ளை, கணைச்சுரம், மாந்தம் முதலியன குணமாகும்!

கல்லுருவி

“கல்லுருவிப் பூண்டு பல கட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டறுக்கும் வ்ந்த புண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யுமோது”

கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்புளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விஷத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்படக்கும்.

ஊழலாற்றி

"அடவிவதி ஊழலாற்றி யெனுமூலி
பட விரணம், புண்கொளுக்கை பாலை - கடி தடத்தால்
வந்தவரை யாப்பு, வெள்ளை வாதப் பிடிப்பு குட்ட
பித்த வகை நோயகறுமெண்"

ஊழலாற்றி எனப்படும் இம்மூலிகையானது மேக விரணம், ஒட்டுப்புண், கொறுக்கு, ஆண்குறி வீரணம், சிரங்கு, அரையாப்பு, வெள்ளை, கீல்வாயு, பெருநோய் ஆகியவற்றை நீக்கவல்லது.

மேகாரி

மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?

மேகாரிக்கு "ஆவாரை" என்ற பெயரும் உண்டு. ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம். மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும்

கழுதைத் தும்பை

'அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'

கழுதைத் தும்பை என்னும் 'கவிழ் தும்பை' மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், இரத்தமும் சீதமும் கலந்த வருங்கடுப்பு ஆகியன நீங்கும். இதன் இலையை தேன்விட்டு வதக்கி நீர்விட்டு குடிநீர் செய்து கொடுக்கப் பெரும்பாடு நீங்கும்.

மருத்துவப் பழமொழிகள்

1. அண்டத்திற்கு உள்ளது
பிண்டத்திற்கும் உள்ளது

2. ஆற்றுநீர் வாதம் போக்கும்,
அருவிநீர் பித்தம் போக்கும்,
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.

3. கழுதைப் பாலைக் குடித்ததாம்;
அழுத பிள்ளை சிரித்ததாம்.

4. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.

5. அறுகங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்.

6. அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தரமாட்டான்.

7. அன்னமயமே பிராண மயம்.

8. உண்டைபின் இரு மைல் நட.

9. உல்லாச நடை மேனிக்கு கேடு;
மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.

10. ஊறிக் காய்ச்சாத குடிநீரும்
ஏரி காக்காத தண்ணீரும் பயனில்லை.

சமுத்திரப் பச்சை

"ஐயமகற்று மரோசகத்தை மாற்றிவிடும்
பையுதிரவாயுவையும் பற்றறுக்கும் - மெய்யை
அமிழ்த்துகின்ற நீரையனிலத்தைப் போக்குஞ்
சமுத்திர நற் சோஹி விதைத்தான்"

சமுத்திரப் பச்சை இலையைக் கட்டிகள் மீது அடிப்புறமாக வைத்துக் கட்டினால் பழுத்து உடையும். மேல்புறமாக வைத்துக் கட்டினால் கட்டி கரையும்.

இதன் வேரை முறைப்படி குடிநீரிட்டு வாத வலிகளுக்கு கொடுத்து வரலாம். நரை திரை மூப்பின்றி வாழச் செய்யும் மூலிகை இது.