"அடவிவதி ஊழலாற்றி யெனுமூலி
பட விரணம், புண்கொளுக்கை பாலை - கடி தடத்தால்
வந்தவரை யாப்பு, வெள்ளை வாதப் பிடிப்பு குட்ட
பித்த வகை நோயகறுமெண்"


ஊழலாற்றி எனப்படும் இம்மூலிகையானது மேக விரணம், ஒட்டுப்புண், கொறுக்கு, ஆண்குறி வீரணம், சிரங்கு, அரையாப்பு, வெள்ளை, கீல்வாயு, பெருநோய் ஆகியவற்றை நீக்கவல்லது.