"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே
பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்
பண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய
பிண் முருக்கம் பூவை மொழி"
கல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, கிஞ்சுகம் போன்ற பெயர்கள் உண்டு.
இக்கல்யாண முருங்கையால் சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய் நீங்கும்.
1 Comments
"உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி"
அவிரியிலையைக் குடிநீர் செய்து கொடுக்க நஞ்சு கீழ்வாதம் நீங்கும் எல்லாவகையான விஷங்களையும் முறிக்கும். வெட்டை குன்ம நோய் போக்கும்.

"மேகமகறும் விழி குளிரும் நாளத்தின்
வேகமகறுமங்க மேனியிடும் - நாளத்தின்
வாசிப் பாலைப் பருவ மாந்தரை வீக்குலங் கொடியே
ஊசிப் பாலைப் பன்னமுன்"
ஊசிப் பாலைக் கீரையை சமைத்து உண்டால் வெள்ளை நீர் எரிச்சல் நீக்கி கண் குளிர்ச்சி உண்டாக்கி தேக புஷ்டியும் உண்டாகும்.

"கண்ணொளியும் மெய்யிற்கமழ்மணமும் நீடழகும்
நண்ணும் வலி மூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்
கங்குறும் வாழ்வார் குழலே காரமொடு வெப்பு மிகத்
தங்கு மிருவாட்சி மரத்தால்"
இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.

"ஆடு தொடாப்பாளைக் கதக்கிருமிவன் சிலந்தி
நீடு கருங்குட்டம் நிறைகரப்பான் - ஆடிடச் செய்
எண்பது வாய்வும் இகல் குட்ட முந்நீரும்
திண்பெறு நற்றாது வுமாஞ் செப்பு"
கணைச்சூடு, முடிகொட்டிப் போதல், கரப்பான், கிரந்தி முதலிய நோய் நீங்கும்.
விதைகளைப் பொடித்து ஐந்து கிராம் எடுத்து 50 மில்லி சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்று வலி, சூதகத் தடை, சூதகக் கட்டு, முறைசுரம், பிரசவ வேதனை ஆகியவை போகும். குடற்புழுக்கள் செத்து வெளியே வரும்

"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாறும்- நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்புற்ற பொன்னே! புகல்"
கோடாசூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும். பித்த வாயு மேகம் போகும்.

சீராகும் செங்கழுநீர்
தோராத சீ வசியம்
மாறாத நாற கரந்தை
பூராய வித்தை தரும்
ஆதாளம் பால் தோட அகற்றுமே
மேவனுகோ வலப்பை
கலக்கக் கல்லானி பேரை.
செங்கழுநீர் மூலிகை, பெண்களைக் கவரும் ஒன்றாகும். கரந்தையானது கல்வியை அறியும்படியாக மூளைக்கு ஆற்றலைத் தரும்.

சிவனார் வேம்பு தனை
நவநாதர் பேரெழுதிச்
சிவமாகவே உண்ணவே
தவமாகும் காய சித்தி
பங்கியம் சேர் நீர் மூழ்கில்
சங்கு மித நூறு தனில்
மங்கை பிரியா வசியம்
எங்கு மிகவே வசியம்
சிவனார் வேம்பை உண்ண உடல்வலிமை பெறும். இது காயகற்ப மூலிகையாகும். (சிவம் - நன்மை) சங்கக் குப்பியை உலர்த்திப் பொடிசெய்துண்ண பெண்கள் விரும்பும் வண்ணம் அழகுண்டாகும்.

இம்பூரல் வேர் சமூலம்
தெம்பாகவே கொணர்ந்து
தம்பிராணையே நினைந்து
தெம்பாகவே உண்ணவே
குத்திருமல் கோழை, சலம்
இரத்தமொடு சீ விழுதல்
அற்றுவிடும் மேகவாசம்
புத்தியுடம் உண்ணவே.
இம்பூரல் சமூலத்தைப் பொடி செய்து தக்க அனுபானத்தில் உண்ணவும். கோழை, சலம், இரத்தகாசம், மேகப்பிணிகள் நீங்கும்.

கொல்லங் கோவை சூழ்கிழங்கை
நல்லாவின் பாலில் உண்ண
எல்லா விடமும் மீளும், வில்லடை
இல்லாமலே ஓடும்
முத்தமெனும் மூலமதில்
மெத்த வயிறோமல் நிற்கும்
சக்தியொடு தாகமுடன்
கத்தி முன்னில்லாது சொன்னேன்.
கொல்லங்கோவைக் கிழங்கைப் பாலிலிட்டு அவித்து உண்ணவும். விடக்கடிகள் நீங்கும். மூலம், வயிற்றுக்கேடுகள் என்பன முத்தக்காசால் தீரும். வாந்தி. நீர்வேட்கை என்பனவும் தீரும்.