"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாறும்- நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்புற்ற பொன்னே! புகல்"


கோடாசூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும். பித்த வாயு மேகம் போகும்.