"மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு."

இடுமருந்தின் தோடத்தை நீக்கும். உடலில் உண்டாகும் பித்தத்தை தணிக்கும். உணவைச் செரிப்பிக்கும். கடுவனையும், வாயுவையும் உண்டாக்கும்.

இக்கீரை இடுமருந்தை முரிப்பதுபோல் மற்ற மருந்துகளின் செய்கையையும் கெடுக்கும். எனவே நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் காலங்களில் இந்தக் கீரையை நீக்க வேண்டும். சாதாரணமாக நாள்தோறும் உணவாக உட்கொள்ளாமல், வேண்டும்பொழுது மட்டும் இதைக் கறியாகச் சமத்துண்ண, அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்ட நற்குணங்களைக் கொடுக்கும். வயிற்றுப்புழு நீங்கும்.

மேலும்,

1. கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் ஒன்று இரண்டு துளிவிட நான்காம்முறைக் காச்சல் விலகும்.
2. கீரையின் சாற்றைத் தலையில் பூசித் தலைமுழுக, வெறி நீங்கும்.
3. சாறு ஒரு பங்கு, தேன் ஐந்து பங்கு கூட்டி, நன்றாய் உறவுபடக்கலந்து உச்சியில் விரலால் தடவ குழந்தைகளுக்குக் காணும் நீர்க்கோவைப் போகும்.
4. சாற்றை இரண்டு துளி மூக்கில் விட நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
5. இலையை அரைத்துக் கற்கமாகஸ் செய்து காயங்களுக்கு வைத்துக் கட்டலாம்.