சங்குதனின் வேர்ப்பொடியைத்
திங்க அதில் மேகமெல்லாம்
இங்கிதமாய் ஏக முண்டு
மங்கை பாகர் தாமுரைத்தார்.

சங்கங் குப்பியின் வேர்ப்பொடியை உண்ண, மேகநோய்கள் நீங்கும். இதனைச் சிவபெருமான் உரைத்தார்.